மங்களாசாசனம் |
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் |
தலச்சிறப்பு |
பூவுலகில் உள்ள 106 திவ்யதேசங்களையும் ஸேவித்தவர்களை, அவர்கள் பரமம் அடைந்தபின், பகவானே இந்த திவ்யதேசத்திற்கு அழைத்துச் சென்று ஸேவை சாதிக்கின்றார் என்பது நம்பிக்கை. சூட்சும சரீரம் பெற்ற பின்பே தரிசிக்க முடியும்.
மூலவர் க்ஷீராப்திநாதன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், ஆதிசேஷ சயனம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் கடல்மகள் நாச்சியார், பூதேவி ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். பிரம்மா, ருத்ராதிகள் முதலிய தேவர்களுக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
பெரியாழ்வார் 5, ஆண்டாள் 3, திருமங்கையாழ்வார் 11, குலசேகராழ்வார் 2, நம்மாழ்வார் 9, திருமழிசையாழ்வார் 13, பொய்கையாழ்வார் 1, பூதத்தாழ்வார் 2, பேயாழ்வார் 4, தொண்டரடிப்பொடியாழ்வார் 1, ஆக மொத்தம் 51 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
|